அகத்தியர் வழிபட்ட 163 தலங்களின் விபரம் கிடைத்துள்ளது (Agathiyar Temples)
ஈஸ்வரனின் கருணையும், அகஸ்தியரின் ஆசியும் இருந்தால் மட்டுமே கீழ்க்கண்ட ஏதாவது ஒரு கோயிலுக்காவது செல்லும் பாக்கியம் வாழ்நாளில் கிடைக்கும்.
1.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஆடையூர் கிராமம் ,அண்ணாமலை கிரிவலப்பாதை திருவண்ணாமலை.(வாயு லிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே ஆடையூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது.கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்)
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49. (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தண்டையார்பேட்டை, சென்னை.
5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நல்லூர் கிராமம், சென்னை.
6. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சோழிபாளையம் சென்னை.
7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,கொளத்தூர் ,சென்னை.
8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,வேலப்பன்சாவடி, சென்னை.
9. அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில், சித்தாலபாக்கம், சென்னை.
10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேங்கடமங்கலம், சென்னை.
11. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மிட்டனமல்லி, ஆவடி, சென்னை.
12. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூந்தண்டலம், சென்னை.
13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம், சென்னை.
14. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பவுஞ்சூர், சென்னை.
15. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அணைக்கட்டு சேரி, சென்னை.
16. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பெருங்களத்தூர், சென்னை.
17. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெடுங்குன்றம், சென்னை.
18. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.
19. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை.
20.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
21.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
22.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்
23.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.
24.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)
25.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.
26.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில், (ஆவுடையார் கோயில் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது)புதுக்கோட்டை மாவட்டம்.
27.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)
28.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.
29.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்
30.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)
31.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம் (உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)
32.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)
33.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;
34.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;
35.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;
36.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)
37.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.
38.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)
39.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)
40.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)
41.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)
42.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)
43.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;
44.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;
45.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;
46.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் தென் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது)
47.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018
48.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;
(சேத்தியாதோப்பு என்ற ஊரிலிருந்து தென்கிழக்கு திசையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.)கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018
49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)
50.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;
51.அருள்மிகு சிவகாமிசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்
52.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.
53.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.
54.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)
55.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.
56.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.
57.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)
58.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.
59.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.
60.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202
61.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;
62.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)
63.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;
64.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.
65.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம் குடவாசல் அருகில்)
66.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி – காரையூர் அருகில்)
67.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அனகாபுத்தூர் ,சென்னை.
68.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;
69.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்
70.அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணமை(மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 8 கி மீ சென்றால் மணமை கிராமம் வரும்;அதன் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)
71.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஷேசம்பாடி அருகில்,(கும்பகோணம் டூ ஆலங்ககுடி)
72. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அருங்குளம், திருத்தணி.(திருத்தணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்)
73.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், செம்பேடு, திருவள்ளூர். (திருவள்ளூர் என்ற ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்)
74.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஊதிக்காடு, திருவள்ளூர்.( திருவள்ளூர் என்ற ஊரிலிருந்து வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில்)
75.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விடையூர், திருவள்ளூர். (திருவள்ளூர் என்ற ஊரில் இருந்து மேற்கே 9 கிலோமீட்டர் தொலைவில்)
76. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, ஊத்துக்கோட்டை. (பெரியபாளையம் என்ற ஊரிலிருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
77. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வஞ்சிவாக்கம், பொன்னேரி.(பொன்னேரி என்ற ஊரில் இருந்து வடகிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
78. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சோழவரம், பொன்னேரி .(பொன்னேரி என்ற ஊரிலிருந்து தெற்கே 14 கிலோமீட்டர் தொலைவில்)
79. அருள்மிகு ராஜேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை.
80.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஓரத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டம். (ஸ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)
81. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிறுவள்ளூர், காஞ்சிபுரம். (காஞ்சிபுரத்திற்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
82. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளாயிவூர், வாலாஜாபேட்டை. (வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில்)
83.அருள்மிகு செல்லியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் வெங்குடி, வாலாஜாபேட்டை. (வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
84. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெல்வேலி, வாலாஜாபேட்டை (வாலாஜாபேட்டை என்ற ஊரில் இருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
85.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் , விசூர், உத்திரமேரூர். (மானாம்பதி க்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
86.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காட்டான் குளம், உத்தரமேரூர்.(உத்திரமேரூர் என்ற ஊருக்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
87. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருந்தண்டலம், செங்கல்பட்டு (செங்கல்பட்டு என்ற ஊரிலிருந்து கிழக்கே பதினொரு கிலோமீட்டர் தொலைவில்)
88. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஒழுகலூர், செங்கல்பட்டு. (செங்கல்பட்டு என்ற ஊரில் இருந்து தெற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
89. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மாடயம்பாக்கம், மதுராந்தகம் (செய்யூர் என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
90. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி.(வந்தவாசி என்ற ஊரிலிருந்து கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)
91. அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், உளுந்தை, வந்தவாசி வட்டம் (வந்தவாசி என்ற ஊரிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)
92. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆர்பாக்கம், திருவண்ணாமலை வட்டம். (திருவண்ணாமலை என்ற ஊரில் இருந்து வடக்கே 21கிலோமீட்டர் தொலைவில்)
93. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். (திருவண்ணாமலை என்ற ஊருக்கு தென்கிழக்கு 23 கிலோமீட்டர் தொலைவில்)
94. அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், புதுப்பாளையம், செய்யாறு வட்டம். (மாமண்டூர் என்ற ஊரில் இருந்து தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
95. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் செய்யாதுவனம்,செய்யாறு வட்டம்.(செய்யாறு என்ற ஊரில் இருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில்)
96. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வாச்சனூர், செய்யாறு வட்டம்.( செய்யாறு என்ற ஊரில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில்)
97. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பரஞ்சி,அரக்கோணம் வட்டம். (அரக்கோணம் என்ற ஊரில் இருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
98. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகவேடு, அரக்கோணம். வட்டம் (அரக்கோணம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில்)
99. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வெண்ணம்பள்ளி, வாலாஜாபேட்டை.(வாலாஜாபேட்டை என்ற ஊரிலிருந்து வடமேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)
100. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்காஞ்சி, வாலாஜாபேட்டை. (சோளிங்கர் என்ற ஊரில் இருந்து தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில்)
101. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், குகைநல்லூர், குடியாத்தம் வட்டம்.(திருவலம் ஊரில் இருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
102. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர் வட்டம்.(திருக்கோயிலூர் என்ற ஊருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
103.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூவனூர், திருக்கோவிலூர் வட்டம். (திருக்கோவிலூர் என்ற ஊருக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
104. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிமெய்யூர், திருக்கோயிலூர் வட்டம்.(சித்தலிங்க மடத்தில் இருந்து கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில்)
105. அருள்மிகு முத்தாலம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அவலூர்பேட்டை, செஞ்சி வட்டம். (செஞ்சி என்ற ஊருக்கு வடக்கே 28 கிலோமீட்டர் தொலைவில்)
106. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , வீராமூர், செஞ்சி வட்டம். (செஞ்சி என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)
107. அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில் சீ, செஞ்சி வட்டம்.(செஞ்சி என்ற ஊருக்கு வடமேற்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)
108. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், திண்டிவனம். வட்டம் (திண்டிவனம் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவில்)
109. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தென்பேர், விழுப்புரம் வட்டம் (விழுப்புரம் என்ற ஊரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில்)
110.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஒலக்கூர் ,திண்டிவனம் வட்டம்.(திண்டிவனம் என்ற ஊருக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)
111. அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விக்கிரவாண்டி.(சுயம்புலிங்கமாக இங்கே அன்னை புவனேஸ்வரி அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்)
112. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மரகதபுரம், விழுப்புரம் வட்டம் (விழுப்புரம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில்)
113. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சாத்தமங்கலம், சிதம்பரம் வட்டம் (சேத்தியாதோப்பு என்ற ஊருக்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
114. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்களூர், சிதம்பரம் வட்டம் (சிதம்பரம் என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில்)
115. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வட மூர், காட்டுமன்னார்கோயில் வட்டம். (லால்பேட்டை என்ற ஊரில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
116. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம். (லால்பேட்டைக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில்)
117.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் தீவலூர் காட்டுமன்னார்கோயில் வட்டம் (பெண்ணாகடத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
118. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பாட்லூர் ,திருச்செங்கோடு வட்டம்.(திருச்செங்கோடு என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவில்)
119. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கொடூர், நாமக்கல் வட்டம்.( பரமத்தி என்ற ஊருக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில்)
120. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழையூர், அரியலூர் வட்டம் (கீழப்பழுவூர் என்ற ஊருக்கு மேற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)
121..அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று, அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.
122. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், விளந்தை, உடையார்பாளையம், பெரம்பலூர் மாவட்டம்.(ஆண்டிமடம் என்ற ஊரிலிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
123.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழையூர், சீர்காழி வட்டம். (திருவெண்காடு என்ற ஊருக்கு தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில்)
124. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சேமங்கலம், மயிலாடுதுறை வட்டம் (திரு நின்றியூர் என்ற ஊரில் இருந்து வடகிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
125. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மறையூர், மயிலாடுதுறை வட்டம் (மயிலாடுதுறை என்ற ஊரிலிருந்து தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)
126. அருள்மிகு அபிராமி அம்மை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூழையூர், மயிலாடுதுறை வட்டம்.
127. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை வட்டம்.
128. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , ஐவ நல்லூர், நாகப்பட்டினம் வட்டம்.(நாகப்பட்டினம் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
129. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பிரதாபராமபுரம், நாகப்பட்டினம் வட்டம்.(வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
130. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூண்டி, நாகப்பட்டினம் வட்டம்.(வேளாங்கண்ணி என்ற ஊரில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)
131. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வாய்மேடு, வேதாரண்யம் வட்டம் (வேதாரணியம் என்ற ஊரிலிருந்து மேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில்)
132. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளியனூர், நன்னிலம் வட்டம் (பேராளம் என்ற ஊரில் இருந்து மேற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
133.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நாகக்குடி, நன்னிலம் வட்டம் ( நன்னிலம் என்ற ஊரில் இருந்து தெற்கே 7 கிலோமீட்டர் தொலைவில்)
134.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , கீரங்குடி, நன்னிலம் வட்டம் (திருவாஞ்சியம் என்ற ஊரில் இருந்து தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில்)
135.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூங்குலம், நன்னிலம் வட்டம் (நன்னிலம் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
136.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பழையவல்லம், திருவாரூர் வட்டம் (திருவாரூர் என்ற ஊரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
137.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அத்திபுலியூர், திருவாரூர் வட்டம் (கீழவேலூர் என்ற ஊருக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
138.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சுகந்த விளாகம், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில்)
139.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி, திருவாரூர் வட்டம் (கீழவேல்லூர் என்ற ஊரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில்)
140.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாலூர், திருவாரூர் மாவட்டம் (திருவாரூர் என்ற ஊருக்கு தெற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில்)
141. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம். (மன்னார்குடி என்ற ஊருக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில்)
142. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆலத்தம்பாடி, திருதுறை பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
143.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம் (திருத்துறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில்)
144. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், எக்கல்,திருத்துறைப்பூண்டி வட்டம் (திருதுறைபூண்டி என்ற ஊருக்கு வடக்கு எட்டாவது கிலோமீட்டர் தொலைவில்)
145. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மேல காட்டூர், திருவிடைமருதூர் வட்டம் (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
146. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கண்ணார குடி (சிக்கல் நாயக்கன் பேட்டை) (திருப்பனந்தாள் என்ற ஊருக்கு கிழக்கே நாலு கிலோ மீட்டர் தொலைவில்)
147. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,செம்பங்குடி, கும்பகோணம் வட்டம் (நாச்சியார்கோயில் என்ற ஊருக்கு தெற்கே மூணு கிலோ மீட்டர் தொலைவில்)
148. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சந்திரசேகரபுரம், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (வலங்கைமான் என்ற ஊரிலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்)
149. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், முனியூர், பாபநாசம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்(அம்மா பேட்டை என்ற ஊரில் இருந்து வடமேற்கு 7 கிலோமீட்டர் தொலைவில்)
150. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தெக்கூர்,பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம் (ஒரத்தநாடு என்ற ஊருக்கு தென்மேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில்)
151. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பனங்குடி (இங்கே பரமேஸ்வரன் கோயில் என்று அழைக்கிறார்கள்) குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் (அன்னவாசல் என்ற ஊரிலிருந்து தென்கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில்)
152. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பலுவாஞ்சி,மணப்பாறை திருச்சி மாவட்டம் (மணப்பாறை என்ற ஊருக்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில்)
153. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,திருமுக்கூடல், கரூர் வட்டம் (கரூர் என்ற ஊருக்கு கிழக்கே ஒன்பது கிலோமீட்டர் தொலைவில்)
154. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,காரத்தொழுவு ,உடுமலை வட்டம் (உடுமலை என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
155. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஐயப்பட்டி,மேலூர் வட்டம், மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில்)
156. அகத்தீஸ்வரர் திருக்கோயில் , திருச்சுனை,மேலூர் வட்டம் ,மதுரை மாவட்டம் (மேலூர் என்ற ஊருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் மலை மீது)
157. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேதியன்குளம், தேவகோட்டை வட்டம் (தேவகோட்டை என்ற ஊரில் இருந்து மேற்கே 13 கிலோ மீட்டர் தொலைவில்)
158.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமணவயல், தேவகோட்டை வட்டம் (தேவக்கோட்டை என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில்)
159. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சொக்கலிங்கம் கோயிலுக்கு அருகே) புளியங்குடி, நெல்லை மாவட்டம்.
160. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வீரசிகாமணி, சங்கரன்கோயில் வட்டம் ( சங்கரன்கோவில் என்ற ஊரில் இருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில்)
161.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , பின்னவாசல்,பேராவூரணி வட்டம். (பேராவூரணி என்ற ஊருக்கு தென் மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில்)
162. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,மணக்காடு, பேராவூரணி வட்டம் (பேராவூரணி என்ற ஊருக்கு தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில்)
163. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பாபநாசம், பாபநாசம் வட்டம், செங்கோட்டை
*பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...*
*ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:*
*உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!*இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை*
*கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!*
*அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி.* *திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.*
*போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.*
*லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.*
*நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!*
*அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.*
*மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.*
*கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும்.*
*இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள். இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம்.* *இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அருமருந்தாகக் கருதப்படுகிறது.*
*அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.*
*சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.*
*இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.*
*அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.*
*தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது*. *கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.*
*கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.*
*கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.*
*மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.*
*அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.*
*இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.*
*இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.*
*அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!*